அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளையூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

அரவக்குறிச்சி : சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு துவங்கியது. அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.மந்தமாக இருந்த வாக்குப் பதிவு காலை 11 மணிக்கு மேல் தான் மள மளவென்று அதிகரித்தது. பெரும்பலான வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கூட்டமாக நின்றே வாக்களித்தனர். ஆனால் மாஸ்க் அணிவதை கடைபிடித்தனர்.

இந்நிலையில் மதியம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி தெற்கு, மந்தை தெரு நடு நிலைப்பள்ளி வாக்குச் சாவடியினுள்ளே கையுறை சானிடைசர்கள் வழங்கும் தன்னார்வலர்கள் திமுக வுக்கு ஒட்டுப் போடச் சொன்னதாக அதிமுகவினர் கூறியதால் திமுக, அதிமுக வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் 20 நிமிடம் வாக்குப் பதிவு நிறுத்தப் பட்டது.

பின்னர் போலீஸ் மற்றும் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு துவங்கி நடந்தது. மேலும் அரவக்குறிச்சியை அடுத்த கணக்குப் பிள்ளைபுதூர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறின் காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்த பிறகு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது.

Related Stories: