கொரோனா நோயாளிகளுக்கான நேரம் தொடக்கம்: கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார் கனிமொழி எம்.பி..!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம். காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சற்று நேரமானது. சில இடங்களில் அதிமுக- திமுக தொண்டர்கள் மோதிக்கொண்டனர். சில இடங்களில் பூத் சிலிப் உடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இருந்தாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது.

மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே மாலை 6 மணிமுதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.

Related Stories: