சசிகலாவை வாக்களிக்க அனுமதிக்ககோரி தேர்தல் அதிகாரியிடம் அமமுக வேட்பாளர் மனு

சென்னை: சசிகலாவை வாக்களிக்க அனுமதிக்கக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அமமுக ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் மனு அளித்தார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவருடன் இருந்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அமமுக ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தலைமை செயலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தார். அப்போது, சசிகலாவிற்கு வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பின்னர் வைத்தியநாதன் கூறியதாவது: ஜெயலலிதா மறைந்ததால் அவரது பெயரை நீக்கியுள்ளார்கள். ஆனால், உயிருடன் இருக்கும் ஒருநபரின் பெயரை எப்படி நீக்க முடியும். தலைமை தேர்தல் அதிகாரி எங்களின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுப்பியுள்ளார். வீடு அரசுடமையாக்கப்படுவதற்கு முன்பாகவே 2019ல் சசிகலாவின் பெயரை நீக்கியுள்ளார்கள். பெயர் நீக்கம் செய்வதற்கு முன்பாக ஒரு முன்னறிவிப்பை கூட தெரிவிக்கவில்லை. எனவே, உடனடியாக எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதில் நிச்சயம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: