வேளாண் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்: ஓமலூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: வேளாண் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; ஓமலூர் தொகுதி அதிமுகவின் வெற்றிக் கோட்டை. எடப்பாடியை விட நான் அதிகமாக வந்து சென்ற தொகுதி ஓமலூர். இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு 8 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏழை என்ற சாதியே இல்லாத நிலையை உருவாக்குவோம். அதிமுகவிற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கிறார்கள். வேளாண் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என கூறினார்.

Related Stories: