ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு, மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்தது பாஜக அரசு; மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதுதான் பாஜக வேலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு, மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்தது பாஜக அரசு என மு.க.ஸ்டாலின் குற்றம் சாடினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பிரிய வெற்றி பெறப்போகிறது. புதுச்சேரியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு, மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்தது பாஜக அரசு. புதுச்சேரியில் இருந்து பாஜகவை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும். சோதனைக்கு எல்லாம் அதிமுக பயப்படலாம்; திமுக பயப்படாது. புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கு பாஜக ஆளுநர் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தது. ஆளுநர் கிரண்பேடி மீது மக்கள் வெறுப்புடன் இருந்ததால் அவரை மாற்றிவிட்டனர். கடந்த 2 மாதமாக புதுச்சேரி அமைச்சர்கள், சபாநாயகரை பாஜகவினர் மிரட்டினர். புதுச்சேரியில் அமைந்துள்ள பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல. 3 கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான், நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அக்கட்சியின் கொள்கை. மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதுதான் பாஜக வேலை.

பாஜக தவிர எந்த கட்சியும் ஆட்சி நடத்தக்கூடாது என்பதுதான் மோடியின் நோக்கம். மாநிலங்களவையில் ஆட்சியை கலைத்துக்கொண்டு வரும் மத்திய பாஜக ஆட்சியை கலைக்கும் அதிகாரம் நமக்கு வேண்டும். புதுச்சேரியில் கடந்த தேர்தலில் பாஜக 19,000 ஓட்டுகள் மட்டும் தான் வாங்கியது. ரங்கசாமியை மிரட்டடி புதுச்சேரியில் 9 தொகுதிகளை வாங்கி பாஜக போட்டியிடுகிறது. புதுச்சேரியை பலப்படுத்த அமைந்த நல்ல கூட்டணி தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மோடி கூறுகிறார்; 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி தான் நடக்கிறது.

ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட தமிழ்நாட்டில் கொண்டு வர முடியவில்லை என விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர்; புதுச்சேரி மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு நிதியை ஒதுக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்தார்.

Related Stories: