திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை  கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

 ஐ.டி.சோதனை நடத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்று குறுகிய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அனுமதி வாங்காமல் ஐ.டி. சோதனை எப்படி நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எல்லா அதிகாரமும் ஆணையத்தின் கையில் உள்ளபோது தன்னிச்சையாக வருமான வரித்துறை சோதனை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே வருமான வரித்துறை சோதனை நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவும் அதிமுகவும் நினைக்கும் எந்த நோக்கமும் நிறைவேறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: