வெங்கடேச பெருமாள் பிரம்மோற்சவம் ரத்தால் தற்காலிக கடைகளை காலி செய்த வியாபாரிகள்

தங்கவயல்: வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளை அகற்றி கொண்டு, வியாபாரிகள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். தங்கவயலில் புகழ் பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் நடக்கும் ரத உற்சவங்களில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பார். இதனால் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் ரதோற்சவத்தை முன்னிட்டு, தேர் வலம் வரும் ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையின் இரு ஓரங்களிலும் தற்காலிகமாக கடைகளை அமைப்பது வழக்கம்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் தடுப்பு காரணமாக 30-ந்தேதி முதல் ரத உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டதால், நகரசபை மற்றும் நகர போலீசார் சார்பில் தற்காலிக கடைகளை அகற்றும் பணி அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்காலிக கடைகளை காலி செய்து கொண்டு ஏமாற்றத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

Related Stories: