கேரளா சென்று பிரச்சாரம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

கோவை: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கேரளா சென்று பிரச்சாரம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கேரளா மாநிலம் பாலக்காடு செல்கிறார். கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் மோடி, அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜ தலைவர் எல்.முருகனை ஆதரித்தும், கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுவதற்காக பிரதமர் மோடி மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் தாராபுரம் வந்து உடுமலை சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜ மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: