திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

திருவில்லிபுத்தூர்: திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று செப்பு தேரோட்டம் நடந்தது.  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள், ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்புள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரங்கமன்னார் கோயிலில் இருந்து செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர், செப்பு தேரில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோபாலா’ என்ற கோஷம் எழுப்பியபடியே தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: