திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து-திமுக வேட்பாளர் மதிவேந்தன் உறுதி

நாமகிரிப்பேட்டை : ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மதிவேந்தன், நேற்று நாரைக்கிணறு பிரிவு, செம்மன்காடு, பாலாத்துக்காடு, தும்பல்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திமுக தேர்தல் அறிக்கையை வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பெரப்பன்சோலை, பெரியகோம்பை, முள்ளுக்குறிச்சி, கரியம்பட்டி, மூலக்காடு, சின்ன மற்றும் பெரிய சிக்கிடி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயிகளின் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவி குழுவினர் கடன்கள் ரத்து செய்யப்படும், சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். ரேஷனின் தரமான பொருட்கள் கிடைக்கும். நீட்தேர்வு ரத்து செய்யப்படும். கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு தலா ₹4 ஆயிரம் வழங்கப்படும்,’ என்றார்.

தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட டாக்டர் மதிவேந்தனுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏவும்,   நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலருமான ராமசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: