தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி..! தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

சென்னை: தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் பணியில் காவலர்கள் மற்றும் பறக்கும் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனிடையே சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் அருகே தேர்தல் பணியின்போது பேருந்து மோதி பறக்கும் படை வாகனம் கவிழ்ந்ததில் துணைக் காவல் ஆய்வாளர் கர்ணன், காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில்  தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

Related Stories: