அரூர்: தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு நன்செய், புன்செய் பயிராக பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கிலிருந்து மாவை எடுக்க ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த மாவிலிருந்து சேமியா, ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. பின்னர் கிடைக்கும் கழிவு காகித ஆலைகளில் பேப்பர் தாயரிப்பிலும், ஜவுளி துறையில் துணிகளுக்கு மொடமொடப்பை கொடுக்கவும், பசை தயாரிப்பிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கென சேலம், ஆத்தூர், தர்மபுரி மாவட்ட சேகோ பேக்டரிகளிலிருந்து கிழங்கு கழிவுகள் அரூர் வழியாக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. லாரிகளில் திறந்த வெளியில் கொண்டு மரவள்ளி கிழங்கு கழிவுகளை கொண்டு செல்லப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசூவதுடன், மாவும் வழிநெடுகிலும் கொட்டி கொண்டே செல்வதால், இருசக்கர வானங்களில் செல்வோர் வழுக்கி விழ நேரிடுகிறது. எனவே மரவள்ளி கிழங்கு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்ட செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
