கொரோனா தொற்றை தடுக்கும் புதிய கருவி மற்றும் ஆப்: நாட்டில் முதல்முறையாக பெங்களூருவில் அறிமுகம்

பெங்களூரு: கொரோனா தொற்று பாதித்தோரை அடையாளம் காணும் புதிய கருவி மற்றும் மொபைல் அப்ளிகேஷன் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (சி.இ.ஆர்.டி) தலைவரும் விஞ்ஞானியுமான  ராஜா விஜயகுமார், கொரோனா தொற்று தடுக்கும் சியாகோகான் கருவி மற்றும்  சைகோஸோன் செல்லிட பேசி செயலி ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது,  ``கடந்த 14 மாதங்களாக கொரோனா தொற்று பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி  வருகிறது. இதனால் உலகவில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா ஊரடங்கால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா உள்பட பல  கோடிய நோய்களை உருவாக்கும் நுண் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கும் நவீன  கருவியை கண்டுப்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அதில் வெற்றி  கிடைத்துள்ளது. இந்த புதிய கருவியை பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிலையங்கள்,  ஓட்டல்கள், திரையரங்குகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பொருத்தி  விட்டால், அங்கு தொற்று நோய்களை பரப்பும் கிருமிகளை அழித்து விடும் ஆற்றல்  படைத்துள்ளது. அதேபோல் சைகோஸோன் செல்லிட பேசி செயலி மூலம் கொரோனா தொற்று  பரவாமல் உள்ள இடங்களை தங்கள் செல்போனுக்கு தகவல் கொடுக்கும் வகையில்  தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நாட்டில் முதல் முறையாக  பெங்களூருவில் அறிமுகம் செய்வதாகவும் தெரிவித்தார்’’.

Related Stories: