அமெரிக்காவில் மர்ம நபர் வெறி சூப்பர் மார்க்ெகட்டில் 10 பேர் சுட்டுக்கொலை: ஒரே வாரத்தில் 2வது பயங்கரம்

கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பவுல்டர் நகரில், ‘கிங் சூப்பர் மார்க்கெட்’ இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இதில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை சிறை பிடித்தான். இது  குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கடையை சுற்றி வளைத்தனர்.  அந்த நபரை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அந்த நபர், சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக  துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து பலியாகினர்.  இதனை தொடர்ந்து, அதிரடியாக செயல்பட்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

அந்த நபரின் கால்களில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. இதனை தொடர்ந்து அவனை போலீசார் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கான  காரணம் என்ன? கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உட்பட எந்த விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.  அமெரிக்காவில் இந்தாண்டில் நடக்கும் 2வது மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். கடந்த 16ம் தேதி அட்லாண்டாவில் ஸ்பாக்களில் நடத்தப்பட்ட  துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: