டெல்லியில் திடீர் புழுதிப்புயல்

புதுடெல்லி; டெல்லியில் திடீர் புழுதிப்புயல் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.டெல்லியில் கடும் அனல்காற்று வீசி வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீர் புழுதிப்புயல் வீசியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். எங்கு பார்த்தாலும் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மக்கள் சுவாதிக்க முடியாமல் திணறினர். பலர் முகத்தில் துணியை கட்டி மூடிக்கொண்டனர். நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 21.5 டிகிரியாகபதிவானது.

இது இந்த ஆண்டின் அதிகபட்சமாகும். அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 29.6 டிகிரியாக பதிவானது. இது வழக்கத்தை விட குறைவாக இருந்தது. ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை 35.2 டிகிரியும், திங்கட்கிழமை 33.6 டிகிரியும் பதிவாகி இருந்த நிலையில் நேற்று 29.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. மேலும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் அதிகபட்ச வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. அதே போல் காற்றின் தரம் மோசம் நிலையில் காணப்பட்டது. 24 மணி நேர தரப்புள்ளியின்படி 244 புள்ளியை எட்டியிருந்ததாக மத்திய சுற்றுச்சூழல் வாரியம் அறிவித்தது.

Related Stories: