ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்.: சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையை அடுத்த ஆவடி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை முன்னதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்தனர்.  

அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை காவல்துறையினர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் அப்போது கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவாதம் அளித்ததை ஏற்று 10 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: