பஞ்சாபில் பரிசோதனைக்கு அனுப்பட்ட 401 பேரில் 81 % பேருக்கு பிரிட்டிஷ் கொரோனா: இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் பஞ்சாப் முதல்வர் கவலை

பஞ்சாப்: பஞ்சாபில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 401 பேரின் சளி மாதிரிகளில் 81 சதவிகிதம் பேருக்கு உருமாறிய பிரிட்டிஷ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிட்டிஷ் கொரோனா வைரஸால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு உட்பட்டோருக்கும் போட அனுமதிக்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதுவரை பஞ்சாபில் 2,15,409 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,90,399 பேர் குணமடைந்துள்ளார், மேலும் பஞ்சாப்பில் 6,382பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 18,628 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Stories: