சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு... இதுவரை 87 சாட்சிகளிடம் விசாரணை...வழக்கு 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் சிபிசிஐடி விளக்கம்

சென்னை: சிறப்பு டிஜிபி மீதான பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில மதங்களுக்கும் முன்பு தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோரிடம் சிறப்பு டி.ஜி.பி ஒருவர் மீது பாலியல் புகாரளித்தார்.

அந்தப் புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தான் பணியாற்றும் இடத்திலிருந்து புகாரளிக்க சென்னை நோக்கி வரும்போது, தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டது.

அதனையடுத்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் குரல் கொடுத்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. அப்போது நீதிமன்றன் சார்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. பின்னர் இன்று நடந்த விசாரணையில் சிபிசிஐடி சார்பில் சில விளக்கங்கல் அளிக்கப்பட்டுள்ளது.  

அதாவது வழக்கு விசாரணை இன்னும் 8 வாரத்திற்குள் முடிக்கப்படும். சிறப்பு டிஜிபி மீதான வழக்கு தொடர்பாக இதுவரை 87 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் காவல் அதிகாரியின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது; சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது என சிபிசிஐடி கூறியுள்ளது.

அதனையடுத்து புகாருக்குள்ளான காவல் உயரதிகாரி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: