உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 12.42 கோடியை தாண்டியது!! 27,35,205 பேர் உயிரிழப்பு

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டி உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.42 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 124,291,478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 100,266,996 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 35 ஆயிரத்து 205 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 21,198,457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,820 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 30,576,962, உயிரிழப்பு -  555,945, குணமடைந்தோர் - 22,846,003

பிரேசில்   -   பாதிப்பு- 12,051,619, உயிரிழப்பு -  295,685, குணமடைந்தோர் -  10,507,995

இந்தியா   -   பாதிப்பு - 11,686,330, உயிரிழப்பு -  160,200, குணமடைந்தோர் -  11,179,059

ரஷ்யா    -   பாதிப்பு -  4,466,153, உயிரிழப்பு -   95,391, குணமடைந்தோர் -   4,077,185

இங்கிலாந்து - பாதிப்பு - 4,301,925, உயிரிழப்பு -   126,172, குணமடைந்தோர் -   3,694,155

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 4,298,395

இத்தாலி    - 3,400,877

ஸ்பெயின்   - 3,228,803

துருக்கி     - 3,035,338

ஜெர்மனி    - 2,678,262

கொலம்பியா - 2,342,278

அர்ஜெண்டினா- 2,252,172

மெக்சிக்கோ  - 2,197,160

போலந்து    - 2,073,129

ஈரான்       - 1,808,422

Related Stories: