வேப்பூர் அருகே மேமாத்தூரில் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

வேப்பூர் :கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் சுமார் 4300 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மணிமுக்தாற்று வழிப்பாதையை கடந்து வேப்பூர், நல்லூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த கிராமத்தின் மற்றொரு பாதையில் சேலம் - விருத்தாசலம் ரயில்வே சுரங்க பாதையும் அமைந்துள்ளது.மழைக்காலங்களில் மணிமுக்தாறில் இருக்கை புரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் இதனால் மணிமுக்தாற்று வழிப்பாதையை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்த கிராமத்தின் மற்றொரு பாதையில் சேலம் - விருத்தாசலம் ரயில்வே சுரங்க பாதையும் அமைந்துள்ளது. கனமழையில் இந்த சுரங்க பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு போக்குவரத்து வசதியின்றி மே.மாத்தூர் கிராமமே தீவு போல் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது.

இதனால் மழைக்காலங்களில் தீவு போல காட்சியளிக்கும் இப்பகுதியில் மழை தண்ணீர் வடியும் வரை மேமாத்தூர் கிராம மக்கள் மருத்துவம் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதனால் மணிமுக்தாற்றின் குறுக்கே  பாலம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்‌, ஆனால் அரசு அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேமாத்தூர் கிராம மக்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: