தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ரூ.215 கோடி அளவிலான பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று வரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.215 கோடி அளவிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ம் தேதியில் இருந்து நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் மற்றும் பரிசு பொருட்கள் ரூ.215 கோடியே 28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்க பணம் மட்டும் ரூ.79 கோடி. ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 1,073,04 லட்சம் லிட்டர் மதுபானம். ரூ.53 லட்சம் மதிப்புள்ள கஞ்சா. ரூ.117.81 கோடி மதிப்புள்ள 404 கிலோ தங்கம். ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ வெள்ளி. ரூ.14.75 கோடி மதிப்புள்ள சுவர் கடிகாரம், சேலை, வேட்டி உள்ளிட்ட பரிசு பொருட்கள் என ரூ.215 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: