குஜிலியம்பாறையில் ஆளுந்தரப்புக்கு சாதகமாக செயல்படும் தாசில்தாரை பணிநீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்-மார்க்சிஸ்ட் கட்சியினர் 11 பேர் கைது

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து. ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் தலைமை வகிக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கரிக்காலி கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு கடந்த 2.3.2021 அன்று குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. சட்டப்படி பெறப்பட்ட பட்டாவை எவ்வித சட்ட விதிகளையும் பின்பற்றாமல், ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாக தாசில்தார் சிவபாலன் திடீரென 8.3.2021 அன்று பட்டா மாறுதலை ரத்து செய்துள்ளாளர்.

இதனால் பாதிக்கப்பட்ட சக்திவேல் குடும்பத்தினர் கடந்த 9.3.2021 அன்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த செயலுக்கு காரணமாகவும், சட்டவிரோத பட்டா மாறுதல் செய்து, ஆளுங்கட்சிக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், துணை தாசில்தார் சண்முகம் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏப்.2ம் தேதி குஜிலியம்பாறை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என கோஷமிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபாலசுப்பிரமணி, சரவணன், ஜெயபால் உள்பட 11 பேரை குஜிலியம்பாறை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: