அரவக்குறிச்சி, திருவையாறு உள்பட 5 தொகுதியில் பாஜவை எதிர்த்து போட்டி: நிர்வாண கோலத்தில் மனுதாக்கல் அய்யாக்கண்ணு பேட்டி

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி யில் நேற்றுஅளித்த பேட்டி: கடந்த  நாடாளுமன்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக நாங்கள் அறிவித்தோம். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா எங்களை அழைத்து பேசினார். அப்போது, ‘விளை பொருட்களுக்கு 2 மடங்கு விலை தர வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பை  திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 3முதல் 5 லட்சம் வட்டியில்லா கடன் 5 ஆண்டு காலத்துக்கு வழங்க வேண்டும்.  இளைஞர்களை ஆண்மை இழக்க செய்யும், பெண்களை கருத்தரிக்காமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது’ என   கோரிக்கைகளை முன்வைத்தோம்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு செவி சாக்கவில்லை. தமிழக சட்டமன்ற  பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி, திருவையாறு, தளி, திருவண்ணாமலை, திட்டக்குடி என பாஜக போட்டியிடும் ஆகிய 5 தொகுதிகளில் எங்கள் சங்கம்  சார்பில் போட்டியிட உள்ளோம். நாளை (இன்று), மறுநாள் (நாளை) விவசாயிகளின் இன்றைய நிலையை உணர்த்தும் வகையில் நிர்வாண கோலத்தில்  சென்று இந்த தொகுதிகளில் எங்கள் சங்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: