தமிழக காவல்துறை உயரதிகாரிகள் 9 பேர் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.!!!

சென்னை: உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 பேரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற  தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெற  உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி  உள்ளது.

இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டு வாடா நடைபெறாமல் இருக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை ரூ.133 கோடி மதிப்பிலான பணம், நகை,  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 உயரதிகாரிகளை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்:

 

* மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் அன்பரசன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடமாற்றம்

* சென்னை வடக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கோவிந்தராஜா இடமாற்றம்.

* சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக டி.எஸ்.பி. வல்லவன் இடமாற்றம்.

* பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு விழுப்புரம் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் இடமாற்றம்.

* வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. திருநாவுக்கரசு இடமாற்றம்.

* திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  டி.எஸ்.பி. கோபாலன் சந்திரன் இடமாற்றம்.

* ராமநாதபுரம் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுபாஷ் இடமாற்றம்.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: