குண்டும் குழியுமாக மாறிய பணங்குடி- பெரியகொப்பியம் சாலை-மக்கள் கடும் அவதி

*இது உங்க ஏரியா

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பண்ணங்குடி- பெரிய கொப்பியம் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பண்ணங்குடி கிராமத்தில் இருந்து பெரியகொப்பியம், ஆர்ப்பாக்கம், புளிச்சகாடு வழியாக சீர்காழி செல்லும் சாலை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

இதனால் சாலையில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் பண்ணங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்த வழியாக சில நேரங்களில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விடுகிறது. இரவு நேரங்களில் கொள்ளிடம், சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய கொப்பியம் மற்றும் பாண்ணங்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பண்ணங்குடி கிராமத்தில் இருந்து கொப்பியம் நோக்கி செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: