திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம், திருக்கழுக்குன்றத்தில் நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சியினரும், கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்களை அறிவித்தனர். இதில், அதிமுக கூட்டணியில் திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சி வேட்பாளராக திருக்கச்சூர் கே.ஆறுமுகம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் பாமக வேட்பாளருக்கான அறிமுக கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது.