ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில் பராமரிப்பின்றி உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை:  ஏலகிரி மலை சிறுவர் பூங்காவில் பராமரிப்பின்றி விளையாட்டு  உபகரணங்கள் உடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த சுற்றுலா தளம் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் 100க்கும் மேற்பட்டவை உள்ளன. இதனால், வெளியில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை ரசிக்கின்றனர். மே மாதத்தில் கோடை விழா நடைபெறுகிறது. மேலும், இசை நடனம், நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இதனால், இங்குள்ள புங்கனூர் படகுத்துறை, இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, முருகன் கோயில், நிலாவூர் படகுத்துறை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் பழுதடைந்துள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களின் குழந்தைகள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் வகையில் பல்வேறு பூங்காக்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களையும் அதிகப்படுத்தி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: