100 நாள் வேலைத்திட்டம் - பின் தங்கிய தமிழகம்..! அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கூட பணிகளை வழங்காததால் 15-இடம்

டெல்லி: நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றால் வேளாண் பரப்பளவு படுவேகமாக சரிந்து வரும் நிலையில், நகரங்களை நோக்கி இடம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்களுக்கான வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தி தருவதற்காக 2005ல் மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாளுக்கு குறையாமல் வேலை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டம் தொடக்கத்தில் நாட்டில் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2008ல் நாடு முழுவதும் 661 மாவட்டங்களில் 2.62 லட்சம் கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. குளம், குட்டைகளை  தூர்வாருதல், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், வயல்களில் மண் வரப்பு, கல் வரப்பு கட்டுவது, தனி நபர் கழிவறை, கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுதல், மரம் நடுதல், துப்புரவு பணி என பலவகையான பணிகளை இந்த தொழிலாளர்கள் மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே சிறப்பாக 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

அசாம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட், மாநிலங்கள் மத்திய அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக சாலை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதித்த அளவுக்கு கூட ஆட்கள் இல்லாமல் 15-வது இடத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின்தங்கி இருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

Related Stories: