‘கூகுள்’ மூலம் கொரோனா தடுப்பூசி மையம்: தமிழ் உட்பட 6 மொழியில் விளக்க முடிவு

புதுடெல்லி: பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்க திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் சர்வதேச அளவில் பிரபலமானது. எவ்வித தகவலும் கூகுளின் தேடுபொறியில் தேடி அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில், கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் உள்ளிட்ட தனது பிரிவுகளுக்கு சென்றால் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை இந்நிறுவனம் வழங்க உள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன், பாதுகாப்பு தன்மை, பக்க விளைவுகள் உள்ளிட்ட தகவல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வழங்கி வருகிறோம். கொரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் எங்கள் தளம் மூலம் விளக்கம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் தேடுதளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.

Related Stories: