கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

*    கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்து சாம்பாரில் 1 ஸ்பூன் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

*    கொள்ளை வேக வைத்து வடித்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து தனியே வைக்கவும். கோதுமை மாவில் 1 சிட்டிகை மஞ்சள்  பொடி, உப்பு சேர்த்து அதனுடன் கொள்ளு கலவையும் சேர்த்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணைய் காய்ந்த பின் உருண்டைகளை  பொரித்தால் இனிப்பான உருண்டை தயார்.

*    வெங்காயத்தை நறுக்கி பசு நெய் விட்டு வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமான மூலம் குணமாகும்.

*    பன்னீரை லேசாகப் பொரித்து தண்ணீர் அல்லது தயிரில் ஊற விட்டு மசாலா கொதித்தவுடன் சேர்க்கவும். அதிகம் கொதிக்கவைத்தால் பன்னீர் கெட்டியாகிவிடும்.

*    இட்லிக்குத் தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினா இலையைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

*    வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தோசைமாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் நன்றாக  இருக்கும்.

*    மாம்பருப்புக் கொட்டையை பொடியாக்கி அரிசி மாவு, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து தேவையானத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து,  சூடான தோசைக்கல்லில் ‘அடை’ களாகத் தயாரித்து சாப்பிட வயிற்றுக்

கோளாறுகள் நீங்கும்.

*    மாங்காயுடன் உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கும் போது தூளாக்கிய வெல்லம், தேங்காய் எண்ணை  கலந்து சில நிமிடம் கழித்துப் பரிமாற இனிப்பு உப்பு, புளிப்பு, காரம் நிறைந்த பச்சடி தயார்!

*    ஃபிரைட் ரைஸ், தேங்காய் சாதம் செய்யும் போது முதலில் எண்ணெய்யில் ஒன்றிரண்டு ஸ்பூன் கசகசாவைத் தாளித்து பிறகு மற்ற  மசாலாப் பொருட்களைச் சேர்த்தால் சுவை கூடும்.

*    இட்லி மாவை அரைக்கும் போதே சிலர் உப்பைச் சேர்த்து அரைத்து விடுவார்கள். அப்படிச் செய்வதைத் தவிர்த்து மாவை அரைத்து எடுத்த  பிறகு உப்பு கலந்து வைத்தால் மாவு நீர்த்துப் போகாது.

*     புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச் சோளம், மிளகு சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, தசை திசுக்களின்  ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாது சத்துகளும் இதில் அதிகம் உள்ளது.

*    குங்குமப்பூ சிறிதளவு, கேசரிப்பொடி சேர்த்து, சர்க்கரைப்பாகு காய்ச்சி அதில் ரச குல்லாவை ஊறவைத்தால் நிறம், மணம், சுவை ஆளையே  அசத்தும்.

*    அரிசி பாயசம் வீட்டில் தயாரிக்கும் போது ரோஜா எசன்ஸ் ஊற்றினால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.

*    ஆம்லெட் மேல் உப்பு, மிளகுத் தூளுடன் கொஞ்சம் சீரகப் பொடியையும் தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.

*    அடைக்கு ஊற வைக்கும்போது பயத்தம் பருப்பு, ஜவ்வரிசி ஊறவைத்து அரைக்கவும். அடை மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

*    உளுந்து போண்டா செய்யும் போது, கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் போட்டு பிசைந்து செய்தால் உளுந்து  போண்டா சாப்பிட மிருதுவாகவும். சுவையாகவும், இருக்கும்.

*    சுடு நீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து அனுதினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுகள் அண்டாது.

*    கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*    பச்சைப்பயறு, துளசி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றைக் கொஞ்சம் வெயிலில் காய வைத்து அதைப் பவுடராக்கித் தினமும் பூசிக்  குளித்தால் உடல் குளிர்ச்சி ஆகும். கோடைகால வெப்பம் தணிக்க வல்லது!

Related Stories: