மாநில பட்ஜெட் குறித்து கேலி செய்யும் பா.ஜ: சதீஷ்ஜார்கிஹோளி தகவல்

பெங்களூரு: மாநில பட்ஜெட் குறித்து பா.ஜ.வை சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் கேலி செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மாநில செயல் தலைவர் சதீஷ்ஜார்கிஹோளி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வடகர்நாடக மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் குழப்பத்தில் உள்ளனர். மாநில பா.ஜ. அரசு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனால் பட்ஜெட் குறித்து பா.ஜ.வை சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் கேலி செய்துள்ளனர். மாநில பட்ஜெட் தொலைநோக்கு பார்வையில்லாத பட்ஜெட்டாகவுள்ளது. இதற்கு முன் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆட்சி காலத்தில் சில நல்ல திட்டங்கள் இருந்தது அவைகளை முன் நடத்தி செல்லவில்லை. ஆலமட்டி திட்டம் முடிவடைவதற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவி தேவைப்படுகிறது. ஆனால் மாநில அரசு பட்ஜெட்டில் ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தை முழுமையாக முடிக்க 20 ஆண்டுகள் தேவைப்படும். மாநில பட்ஜெட்டில் மேலோடமாக நிதி ஒதுக்கீடு காட்டியுள்ளனர். ஆனால் எதற்கு எவ்வளவு என்பது குறித்து சரியான தகவல் தெரிவிக்கவில்லை. இந்த பட்ஜெட் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மக்களை குழப்பம் ஏற்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது என்றார்.

Related Stories: