மக்கள் தொண்டனை தடுப்பது தவறு; அமைச்சர்கள் என்னை பற்றி தவறான அறிக்கை அளித்துள்ளனர்; பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பேட்டி

சென்னை: அமைச்சர்கள் என்னை பற்றி தவறான அறிக்கை அளித்துள்ளனர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பேட்டியளித்துள்ளார். முதல்வரை சந்தித்து தனக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொண்டனை தடுப்பது தவறு. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் நான் எவ்வாறு செய்ல்பட்டு உள்ளேன் என அந்த தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் என கூறினார். என் தொகுதி மக்கள் மற்றும் என் இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் எதற்காக எனக்கு தொகுதி மறுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதன் அடிப்படையில் நான் முதல்வரிடத்தில் நேற்று சந்தித்து பேசியுள்ளேன். துணை முதல்வரை சந்திக்க நினைத்தேன் அவர்களை சந்திக்க முடியவில்லை என கூறினார். போட்டிய பொறாமை என்பது மனதளவில் இருக்க வேண்டும், ஆனால் ஒரு நல்ல தொண்டனை ஒரு மக்கள் பிரதிநிதியை தடுக்கக்கூடிய அளவில் அமைச்சர் அந்த செயலை செய்தாலும் அது தவறுதான். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதறகு என்ன காரணம், நான் மக்களுக்கு உழைத்திருக்கிறேன், மக்களுக்காக நல்ல திட்டங்களை எனது பகுதிக்கு செயல்படுத்திருக்கிறேன், பொதுக்கூட்டங்களை நான் எனது தொகுதியில் செய்திருக்கிறேன் என கூறினார். என்னுடைய செயல்பாடுகள் சரியில்லை என்றால் அமைச்சர்கள் என் மீது குற்றம் சொல்லலாம், நான் என் தொகுதிக்கு கொண்டு வரக்கூடிய திட்டங்கள் வேரை கோவப்படுத்திருக்கிறது என்று சொல்லி என்மீது அவர்கள் பொறாமைப்பட்டால் அது இந்த இயக்கத்திற்கு பாதகமாக முடியும் என கூறினார். கட்சிக்கு நான் செய்த பணிகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இருந்தபோது தான் பல பொறுப்புகளை கவனித்த நான் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என கூறினார்.

Related Stories: