சீனாவின் அத்துமீறல்கள் பற்றி குவாட் தலைவர்கள் நாளை ஆலோசனை: மோடி - பைடன் முக்கிய பேச்சு

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பாக ‘குவாட்’ உள்ளது. ராணுவம், பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி உள்பட பல்வேறு விஷயங்களை இந்த 4 நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில், சீனாவின் அத்துமீறல்கள் பற்றி முக்கியமாக விவாதி்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின்போது, அமெரிக்க அதிபராக பைடன் தேர்வு பெற்ற பிறகு அவருடன் பிரதமர் மோடி முதல்முறையாக அதிகாரப்பூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை தொலைபேசி மூலமாக மட்டுமே பேசி உள்ளார்.

Related Stories: