கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் மகளிர் போலீஸ் நிலையம்

பெங்களூரு: மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மட்டத்திலும் பெண்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும்.

தற்போது 10 பெண் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 10 காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அரசு யோசித்து வருகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி ஆகிய மத்திய சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பல்லாரி, தார்வார், பெலகாவி, ஹுப்பள்ளி, மைசூரு ஆகிய மத்திய சிறைகளிலும் விரைவில் ஜாமர் பொருத்தப்படும்’’ என்றார்.

Related Stories: