கோயில் திருவிழாவில் அம்மன் வீதி உலா செல்வதில் இருதரப்பினரிடையே மோதல்: அன்பில் கிராமத்தில் பாட்டில், கற்கள் வீச்சு ; 5 போலீஸ்காரர் மண்டை உடைப்பு, தடியடி

* அதிரடி படை குவிப்பால் பதற்றம்

* டிஐஜி, எஸ்பி முகாம்

லால்குடி: லால்குடி அருகே அன்பில் ஆச்சிராம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு பகுதிக்கு அம்மன் வீதி உலா வராததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இன்று சுவாமி புறப்பாடின்போது கற்கள், பாட்டிலை சரமாரி வீசியதில் அதிரடி படையை சேர்ந்த 5 போலீஸ்காரர்கள் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். டிஐஜி, எஸ்பி முகாமிட்டுள்ளனர். மேலும் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் ஆச்சி ராம வள்ளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 1994ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பாதையில் இருந்து ஒரு தரப்பு மக்கள் வசிக்கும் வீதிகளில் அம்பாள் வீதி உலா வர வேண்டும், அங்குள்ள மக்கள் கொடுக்கும் பலிபூஜைகளை ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு தரப்பு மக்களின் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு திருவிழா நடைபெறாமல் தடைபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த அனுமதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி இக்கோயிலில் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் அம்மன் வீதி உலா வர வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறை உதவியுடன் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பழங்கால முறைப்படி கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் திருவிழா தொடங்கி தினமும் திருவிழா நடைபெறும் அன்பில் சிவன் கோவிலில் இருந்து ஆச்சிராமவள்ளியம்மன் உற்சவர் புறப்பாடு தொடர்ச்சியாக இதர வழக்கமான வைபவங்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும் என திருவிழா நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் காப்பு கட்டுதல் 22ம் தேதி இரண்டாம் காப்பு

Related Stories: