இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை போட்டுக்கொண்டார் கம்போடியா பிரதமர் ஹன் சென் மேட்

கம்போடியா: இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை கம்போடியா பிரதமர் போட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவுகட்ட தடுப்பூசி ஒன்றே  நிலையான தீர்வு என மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்ததும், உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதிக பாதிப்பை எதிர்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் முந்திக் கொண்டு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கின. இந்தியாவை பொறுத்த வரையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் மற்றும் இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் தடுப்பூசி போடத் தொடங்கி 52 நாளில் 2 கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு இலவசமாக அனுப்பி வருகிறது.  

இந்நிலையில், கம்போடியா பிரதமர் ஹன் சென் மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். கம்போடியா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் கம்போடியா பிரதமர் ஹன் சென் மேட் தடுப்பூசி போட்டுக்கொண்டார். உணவு விஷயத்தில் கூட மற்ற நாடுகளை நம்பாத தலைவர்கள் உள்ள நிலையில், இந்தியாவின் தடுப்பூசியை போட்டுக்கொண்ட கம்போடியா பிரதமர் செயல், உலக மக்கள் மத்தியில் ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: