தக்கலை: குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த 1ம் தேதி வருகை தந்த ராகுல்காந்தி தக்கலை அருகே சந்தித்த மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அவர் முளகுமூடு செல்லும்போது பரைக்கோடு பகுதியில் சிறுவர்கள் சிலர் காமராஜர் படத்தை ஏந்தி நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது காமராஜர் படத்துடன் நின்ற சிறுவனை அழைத்து சென்று பேசினார். அப்போது அந்த சிறுவன் தனது பெயர் ஆன்ட்னி பெலிக்ஸ்(11) எனவும், 6ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளான்.