கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ரூபாய் பயன்படாது: உள்துறை அமைச்சருக்கு சித்து குத்து

பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் எவ்வளவு என்பதை விளக்கி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மத்திய மாநில அரசுகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தினார். இதற்கு உள்துறை அமைச்சர்  பசவராஜ் பொம்மை சமாளிக்கும் வகையில், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க டாலரில் பண பரிவர்த்தனை செய்யவேண்டும். நமது பண மதிப்பு குறைந்தது என்பதால் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது என சப்பை கட்டுவதற்கு முயன்றார். இதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நமது இந்திய பணமான ரூபாய் பயன்படாது. அமெரிக்க டாலரில்தான் அதை நாம் செலுத்த வேண்டும். 2014 க்கு முன்பு இந்திய பணத்தின் மதிப்பு எவ்வளவு இருந்தது? இப்போது நமது பணத்திற்கும் அமெரிக்க டாலருக்கும் எவ்வளவு மதிப்பு என்பதை அனைவருக்கும் தெரிந்ததே..... மத்திய அரசின் வரி விதிப்பு மட்டும் இன்றி மாநில அரசின் வரியும்தான் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சிறிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போது போராட்டம் நடத்தியவர்கள் இப்போது எங்கே? என்றார்.

Related Stories: