பொதுநலம் சார்ந்து இருப்பதால் நீதித்துறை முதன்மை தேர்வை மாற்ற கோரும் மனு வேறு பெஞ்சுக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: வக்கீல்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவது நிறைவடையும் வரை, மார்ச் 13-14 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டெல்லி உயர் நீதித்துறை முதன்மைத் தேர்வு -2017 ஐ ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறொரு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதித்துறையின் முதன்மை தேர்வு வரும் மார்ச் 13-14ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டு அதற்காக அறிவிப்பும் கடந்த பிப்ரவரி 18ம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், இந்த தேர்வை தள்ளி வைக்கக்கோரி, தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது அந்த மனுவில், புற்றுநோயின் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகுவும், தற்போது மிகவும் பலவீனமான நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவா உள்ள நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், உடல் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள சமயத்தில் இந்த தேர்வை எழுத முயன்றால் கோவிட் தொற்றால் எளிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இ்ந்த தேர்வை எழுதி உள்ளவர்கள் பெரும்பாலும் 35-47 வயதுடைய நடுத்தர வயதுடையவர்கள். அவர்களுக்கும் நோய் உளிதாக பரவ வாய்ப்புள்ளது. அதோடு, நீதித்தறை சார்ந்த பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்த முதன்மை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நேற்று  உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த மனு பொதுநல மனுவா என கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் வக்கீல் பதிலளிக்கையில், தனிப்பட்ட ஒருவர் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இது என்றாலும், இதில் உள்ள சராம்சம் என்பது பலரையும் பாதிப்படைய செய்யக்கூடிய பிரச்னை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதை பொதுநல நோக்கு உள்ளதாக கருதலாம் என்றார். இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள்,. அனைத்து பொதுநல மனுக்களும் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன் பட்டியலிடப்பட வேண்டும். எனவே, இந்த மனு மார்ச் 12 அன்று டிவிஷன் பெஞ்ச் -1 க்கு முன் பட்டியலிடப்படும் ”என்று உத்தரவிட்டனர்.

Related Stories: