சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச செயகத்தில் சிறப்பு செலவின பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சிறப்பு செலவின பார்வையாளர் மதுமகாஜன், பாலகிருஷ்ணன் அகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வருமான வரித்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை களமிறக்கப்பட்டு வாகன சோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கட்சிகள் எவ்வளவு பணம் செலவிடுகின்றன என்பதை கண்காணிப்பதற்காக இந்த தேர்தலுக்கு முதல் முதலாக சிறப்பு செலவீன பார்வையாளர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதற்காக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய 2 ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமணம் செய்துள்ளது. 

Related Stories: