உலக மகளிர் தினம் கொண்டாட்டம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டிடிவி.தினகரன்(அமமுக): உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில் மாதர்  குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்): இந்தியாவில் பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் மீதான  தாக்குதல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன. மகளிர் உரிமையைப் பாதுகாக்க சனாதன சக்திகளை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய  அனைத்துலக மகளிர் நாளில் சூளுரை ஏற்போம்.

 எர்ணாவூர் நாராயணன்(சமத்துவ மக்கள் கழகம்): ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. மார்ச் 8ம் தேதியாவது மறவாது அவர்களது பங்களிப்பை போற்றி கொண்டாடுவோம். ஏராளமான பெண்கள் உலகம்  முழுவதும் சாதனை படைத்தது வருகின்றனர். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Related Stories:

>