நிலக்கரி இறக்குமதி விவகாரம்: 1,330 கோடி டெண்டரை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்,  டெண்டரை ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடி இண்ட் விகோ நிலக்கரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பதிவு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி  நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இண்ட் விகோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் அமர்வு, ஏற்கனவே டெண்டர்  கோரி விண்ணப்பிக்க 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளதாலும், டெண்டர் ஆவணத்தை இந்திய வர்த்தக இதழில் வெளியிட்டுள்ளதாலும், தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து   உத்தரவிட்டது.

Related Stories:

>