தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் இருந்த விவகாரம்.: என்.ஐ.ஏ விசாரணை

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் இருந்தது பற்றி என்.ஐ.ஏ விசாரணை நடத்துகின்றனர். மகாராஷ்டிரா போலீசார் விசாரித்து வந்த நிலையில் மறு வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரை போலீசார் பரிசோதித்தனர். அந்தக் காரில் வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது.

இவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ‘ஜெய்ஷ்-உல்-ஹிந்த்’ என்ற பயங்கரவாத அமைப்பு மர்ம கார் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக் (48) என்பவருக்குச் அந்தக் கார் சொந்தமானது என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து தானே நகரில் உள்ள கல்வா கிரீக் நீரோடையில் ஹிரேன் மன்சுக் உடல் சடலமாக கிடந்தது. அந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மகாராஷ்டிரா போலீசார் விசாரித்து வந்த நிலையில் மறு வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ தங்களுது விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: