8.54 லட்சம் பேருக்கு கொரோனா பரவி தமிழகத்தில் ஓராண்டு நிறைவு: பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பதிவாகி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி தற்போது ஓராண்டு  நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி ஓமன் நாட்டில்  இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது  தான் தமிழகத்தில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு ஆகும். இதன்படி பார்த்தால்  நேற்றுடன் தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பதிவாகி ஓராண்டு  நிறைவடைந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 8.54 லட்சம் பேரில் 5 லட்சத்து 16  ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 3 லட்சத்து 38 ஆயிரத்து 213 பேர் பெண்கள்.  இந்த  ஓராண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச கொரோனா தொற்று பதிவாகி இருந்தது.  இதன்படி ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 182 கொரேனா தொற்று பதிவாகி உள்ளது. ஒரு  லட்சத்து 84 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து உள்ளனர். 3387 பேர் மரணம்  அடைந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 26 லட்சத்து 2 ஆயிரத்து 160  சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021 மார்ச் வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அப்போது தினசரி பதிவான கொரோனா 5 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது தினசரி 500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. தினசரி 5 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்.  

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் கொரேனா தொற்று சதவீதம் 1.1 ஆக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் இது 0.9 சதவீமாக குறைந்தது. இந்நிலையில் இந்த மார்ச் மாதம் இது 1 சதவீதாக உயர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>