உலக மகளிர் தினம் வன்கொடுமைக்கு விடை கொடுப்போம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறக்கூடாது என்பதற்காக பொது மக்கள் அனைவரும் தங்களுக்குள்ள பொறுப்பை, கடமையை உணர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்தை, தண்டனையை கடுமையாக்கி உண்மை நிலைக்கு ஏற்ப தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். பெண் இனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து ஆதரவாக செயல்படுகிறது. மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு மகளிருக்கு - கல்வியில், வேலை வாய்ப்பில், பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>