தமிழக சட்டப்பேரவை தேர்தல்: திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னாயகுமரி தொகுதியுயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளும், மதிமுக 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமக-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி பேட்டி:

மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக வெயல்படுகிறோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என கூறினார். திமுகவுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும் ,எழுச்சியையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம் என கூறினார். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு என தொகுதி எண்ணிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்தார். பாஜக மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே என கூறினார். வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என கூறினார். தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது என கூறினார். 

Related Stories:

>