ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன. எனினும் இவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எனினும், சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்குகள் மட்டும் முறையாக எரிந்து கொண்டிருந்தன.