காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்-பசுமை புரட்சி இயக்கம் கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென பசுமை புரட்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால் கலெக்டர், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு பசுமை புரட்சி அமைப்பாளர் சுரேஷ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் நெற்களஞ்சியமாக காரைக்கால் மாவட்டம் இருந்து வருகிறது. இந்தாண்டு தொடர் மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. மழையில் தப்பிய எஞ்சிய பயிர்களை அறுவடை செய்த நிலையில் நெல்லை எடுப்பதற்கு காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 28ம் தேதி மத்திய உணவு கழகம் மூலமாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக கலெக்டர் அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை நெல் கொள்முதல் செய்யவில்லை. அறுவடை செய்த நெல்லை வைக்க இடமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். 2019- 20ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கடந்தாண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 2020-21ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் நகைக்கடன், விவசாய கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: