கருப்பட்டி தோசை

எப்படி செய்வது

Advertising
Advertising

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்த பின் அரைத்து ஒன்றாக கலக்கவும். சுமார் அரை நாள் மாவை புளிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டவும். கரைத்த நீரை லேசாக கொதிக்க வைத்து ஆறியதும், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து தோசை மாவில் போட்டு நன்கு கலக்கவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை தோசை மீது தூவி முடி போட்டு மூடவும். அடுப்பை மிதமாக வைத்து வெந்ததும் திருப்பி போடவும். சுவையான கருப்பட்டி தோசை ரெடி.