செவிதிறன் குறைபாடு சாபமல்ல: துணைவேந்தர் பிரதீப்குமார் கருத்து

கோலார்: ஒருவர் செவி திறன் இல்லாமல் இருப்பது குடும்ப சாபம் என்பதை ஏற்க முடியாது. மருத்துவ முறையில் இயற்கையாக இதுபோன்ற பாதிப்பு  ஏற்படுவதாக தேவராஜ் அரஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய துணைவேந்தர் பிரதீப்குமார் தெரிவித்தார்.சர்வதேச செவிதிறன் குறைபாடு  மற்றும் தடுப்பு தினம் முன்னிட்டு மருத்துவ கல்வி ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசும்போது, நாட்டில் பத்து  பேரில் ஒருவருக்கு செவிதிறன் குறைப்பாடு உள்ளது. இதற்கு  பல காரணங்கள் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களில் இரைச்சல்,  புகை, ஒலி மாசு உள்பட பல காரணங்கள் உள்ளது. சிலருக்கு உடலில் ஏற்படும் மாற்றமும் காரணமாகவுள்ளது.

காதில் மிகவும் மெல்லிய இழைபோன்ற படலம் உள்ளது. கண்ணுக்கு தெரியாத வகையில் திரைப்போல் இருக்கும் இழை தான், நமது காதுக்கு  என்னளவு சத்தம் கேட்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத வகையில் ேஹால்ஸ் விழுந்தாலும் செவி திறனில்  பிரச்னை ஏற்படும். ஹெட்போன் பயன்படுத்தி பாடல் கேட்கும் போது, ஒலி அளவு குறைவாக இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் பாடல் கேட்டால்,  குறைந்த பட்சம் 15 நிமிடம் ஓய்வு கொடுத்தபின் மீண்டும் கேட்கலாம். ஓய்வு கொடுக்காமல் பாடல் கேட்பது செவி இழயை வெகுவாக பாதிப்பதுடன்  ஒரு கட்டத்தில் கேட்கும் தன்மையை இழக்க செய்யும் என்றார்.

Related Stories: